ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா

ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
 காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் இதுவரை ரயில் கட்டணத்தை உயர்த்தவில்லை. பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரயில் கட்டணம் குறைந்த அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
 நாட்டில் 74 சதவீத போக்குவரத்து ரயில் மூலமாகத்தான் நடைபெறுகிறது. ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.21,000 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஏழைகள் பயன்படுத்தும் சாதாரண வகுப்பு ரயில் கட்டணம் கி.மீட்டருக்கு 2 பைசாவும், நடுத்தர, உயர் வகுப்பினர் பயன்படுத்தும் பிற வகுப்பு ரயில் கட்டணம் 6 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே இருந்ததைவிட 20 சதவீதம்தான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதை கண்டித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 ஆனால், தமிழகத்தில் பேருந்து கட்டணம் 100 சதவீதம், பால் கட்டணம் 45 சதவீதம், மின்கட்டணம் 100 சதவீதமும் உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது ரயில் கட்டணம் உயர்வு மிகவும் குறைவுதான். 
 காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்.
 தமிழக-இலங்கை கடல் எல்லை பரப்பில் ஏற்படும் தாக்குதல்கள் தொடர்பாக மத்திய விளையாட்டு மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் அண்மையில் தமிழகத்தில் ஆய்வு செய்தார். இரு நாட்டுக்குழுக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com